Weekend Reading!

A touching poem about Diwali in US!

Diwali

விடிந்தால் தீபாவளி !


 

விய ஆண்டு

ஐப்பசி மாதம் 3ம் நாள்

விடிந்தால் தீபாவளி!

கருமேகம் சூழ்ந்த வானம்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

விண்மீன்கள்

குளிர் வாடைக் காற்று

அமாவாசை இரவு

விடிந்தால் தீபாவளி!

விண்ணை முட்டும் வெடி சத்தமில்லை!

வண்ண வண்ணமாய் ஒளி பரப்பும்

பட்டாசு வானவேடிக்கை இல்லை!

கம்பி மத்தாப்பு பிடித்து கொண்டு

கண்சிமிட்டும் சிறார் கூட்டமில்லை!

சாலையை வழிமறித்து

அணுகுண்டுகளை பரிசோதிக்கும்

இளைஞர்கள் இல்லை!

விடிந்தால் தீபாவளி!

 

தள்ளுபடி விலை கண்டு
அசந்து போகும் ஆடவர் கூட்டமில்லை!
நூறு ரூபாய்க்கு இரண்டு சேலை
வாங்க அலைமோதும் பெண்கள் கூட்டமில்லை!
சாலைகளை அலங்கரிக்கும்
கலர், கலரான நீயான் விளக்கு வெளிச்சமில்லை!
விடிந்தால் தீபாவளி !

வெள்ளிக்கிழமை இரவு

ஆரவாரமில்லாத சாலைகள்

ஆர்ப்பரிப்பில்லா மக்கள் நடமாட்டம்

சாலையோரம் உதிர்ந்து கிடக்கும் இலைச்சருகுகள்

சருகுகளுடன் ஓடிப்பிடித்து விளையாடி

‘சர சர’ ஒலி எழுப்பும்

மிச்சிகன் ஏரிக்காற்று!

‘Hi , Happy weekend’,  என

புன்னகைக்கும் வயோதிகப் பெண்மணி

ஐந்து நாட்கள்

ஓய்வில்லா வேளையினைத் தொடர்ந்து

வாரவாரம் வரும்

Happy weekend.

இதுதான் அமெரிக்க தீபாவளி!

விடிந்தால் நம்ம ஊரில் தீபாவளி!

நண்பர்கள்,

உறவினர்

 அனைவருக்கும்

 இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

B. R. Senthilkumar

A real model village  for future India- article in kumudam –  The seventh article in that page.

Latest posts by Lakshmiammal (see all)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *